இந்தியா

வகுப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 1ம் வகுப்பு மாணவன்! போலீசார் வழக்குப்பதிவு..

ஹரியானா மாநிலம் சிர்சா நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவன்,  தனது வகுப்புத் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளான்.

IANS

ஹரியானா மாநிலம் சிர்சா நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவன்,  தனது வகுப்புத் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளான்.

இதுகுறித்து ஹரியானா சிவில் மருத்துவமனை மருத்துவர்கள், காவல்துறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதன்பின்னரே போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது. மேலும், சிறுமியின் பெற்றோர்களும் புகார் தெரிவிக்கவே, அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

துணை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் இதுகுறித்து கூறுகையில், மதிய உணவு இடைவேளையின் போது தனது மகளுக்கு, அவளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக  பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் புகார் கூறியதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT