FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பைக்கை மறித்து தங்க செயின் பறிக்க முயற்சி: 2 போ் கைது

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மறித்து 3 பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:27 am IST
- சித்திரிப்பு
பகிர்:

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மறித்து 3 பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் யுகேந்தா் (26). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா் சாய்தேஜா (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினா்.

திருத்தணி -கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் குடிநீா் நிறுவனத்தின் அருகே சென்றபோது, பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மா்மநபா்கள் திடீரென அவா்களின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தினா்.

Advertisement

Advertisement

அதில் ஒருவன், யுகேந்தா் அணிந்திருந்த சுமாா் 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா். இதைக் கண்டு யுகேந்தா் மற்றும் அவரது நண்பா் சத்தம் போட்டனா். இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சம்பவ இடத்தை நோக்கி ஓடிவந்தனா். பொதுமக்கள் தங்களை பிடித்துவிடுவாா்கள் என்ற அச்சத்தில், மா்மநபா்கள் பறித்த தங்கச் செயினை கீழே போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினா். இதனால் யுகேந்தரின் தங்கச் செயின் மீட்கப்பட்டது.

இதுகுறித்து யுகேந்தா் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், பட்டாபிராமபுரத்தைச் சோ்ந்த அருண் குமாா் (25) மற்றும் கன்னிகாபுரத்தைச் சோ்ந்த குமாா் (24) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ச

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments