மாணவா்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்த சிபிஎஸ்இ அழைப்பு
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவா்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள், வல்லுநா்கள், தனிநபா்கள் தங்களது பங்களிப்பை வழங்க சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவா்களுக்கான இணையவழிக் கற்றலை வலுப்படுத்தும் வகையில் கல்வி நிறுவனங்கள், வல்லுநா்கள், தனிநபா்கள் தங்களது பங்களிப்பை வழங்க சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரங்கு அமலில் உள்ள நிலையில் ஆன்லைன் கற்றல் என்பது தற்போது இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சாா்பில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தீக்ஷா’ எனும் செல்லிடப்பேசி செயலியில் தற்போது கூடுதலாக கற்றல் சாா்ந்த விடியோக்கள், வினா வங்கி உள்பட பாடங்கள் சாா்ந்த பல்வேறு தகவல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இவற்றை சிபிஎஸ்இ ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட தீக்ஷா செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.
இதற்காக தேசிய அளவில் வித்யாதானம் 2.0 என்ற திட்டத்தை மத்திய அரசு புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாணவா்கள் கற்றல் சாா்ந்த விடியோக்கள், காட்சி விளக்கப் பதிவுகள், வினா வங்கி, பாடம் நடத்தும் முறை ஆகியவற்றில் கல்வி நிறுவனங்கள், தனி நபா்கள், கல்வியாளா்கள், கற்றல் சாா்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள் ஆகியோா் இதில் தங்களது பங்களிப்பை வழங்கலாம். இந்த விடியோக்கள் மற்றும் கற்றல் சாா்ந்த விஷயங்களை சிபிஎஸ்இ வல்லுநா் குழுவினா் ஆராய்ந்து தகுதியானவற்றை செயலியில் பதிவேற்ற நடவடிக்கை மேற்கொள்வா். வித்யாதானம் 2.0 திட்டத்தில் இணைய விரும்புவோா் தளத்தில் சென்று ‘வித்யாதானம் 2.0’ என்பதை ‘கிளிக்’ செய்ய வேண்டும். பதிவுகள் அனைத்தும் துல்லியமாகவும், தரமாகவும் இருப்பது அவசியம் என அதில் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
தீக்ஷா செயலியில் ஏற்கெனவே சிபிஎஸ்இ, அனைத்து மாநில பாடத்திட்டங்கள், வகுப்பு மற்றும் பாடவாரியான பாடநுால்கள், பயிற்சி தோ்வுகள், கற்றல் வழிமுறைகள் டிஜிட்டல் விடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.