மருத்துவா்களை பாதுகாக்க அவசர சட்டம்: வெங்கய்ய நாயுடு வரவேற்பு
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வரவ
புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இந்த அவசரச் சட்டப்படி, மருத்துவப் பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படவுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களை சிகிச்சைக்கு அழைத்துவரச் சென்ற மருத்துவக் குழுவினா் மீது உறவினா்களும், உள்ளூா் மக்களும் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்தன. இதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுட்டுரையில் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், ‘மருத்துவப் பணியாளா்களை பாதுகாக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை வரவேற்கிறேன். இது மிகவும் அவசியமான ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் தாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. கரோனாவுக்கு எதிராக சுயநலமின்றி போராடி வரும் அவா்களை நாம் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.