FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவில் காற்று மாசு பெரிய அளவில் குறைந்துள்ளது: நாசா தகவல்

இந்தியாவில் குறிப்பாக வட இந்தியப் பகுதிகளில் ஊரடங்கு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு வெகுவாகக்

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

இந்தியாவில் குறிப்பாக வட இந்தியப் பகுதிகளில் ஊரடங்கு நடவடிக்கைக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ள தகவலை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்தும், தொழிற்சாலைகளின் இயக்கமும் முற்றிலும் நின்றுவிட்டன.

இதனால், நீர், காற்று மாசுகள் பெருமளவில் குறைந்து வருவதை மக்களே கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள். பூமி தன்னைத் தானே மீட்டெடுக்க இது ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டதாகவும் மக்களே கருதுகிறார்கள்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செயற்கைக் கோள் மூலமாக செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளியிட்டிருக்கும் தகவலில், கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் காற்று மாசுபாடு வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments