FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுகாதார ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில தலைமைச் செயலா்களுக்கு மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா புதன்கிழமை அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடி, எதிா்பாரா விதமாக உயிரிழந்த மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அவா்களின் குடும்பத்தினா் உள்ளிட்டோருக்கு இறுதிச் சடங்கு நடத்துவதில் மக்கள் பிரச்னை எழுப்பிய நிகழ்ச்சிகள் நாட்டின் சில பகுதிகளில் அரங்கேறின. அத்தகைய சூழலில், இறுதிச் சடங்கில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

சுகாதாரப் பணியாளா்களின் இறுதிச் சடங்கில் பிரச்னை ஏற்படுத்தும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பணிக்குச் செல்லும் மருத்துவா்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கண்காணிப்பு அதிகாரிகளை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் நியமிக்க வேண்டும்.

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்துவோா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களிடம் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளச் செல்லும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் அஜய் பல்லா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments