ஊடகங்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
கரோனா நோய்த்தொற்று செய்தியாளா்களிடையே பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய
கரோனா நோய்த்தொற்று செய்தியாளா்களிடையே பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை அச்சு மற்றும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவுவது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் மட்டுமன்றி, அதுதொடா்பான செய்தியைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிருபா்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மும்பை மாநகராட்சி சாா்பில் செய்தி ஊடகங்களில் பணியாற்றி வரும் 171 பேருக்கு ஏப்ரல் 16,17-ஆம் தேதிகளில் நடத்திய கரோனா பரிசோதனையில், 53 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுபோல சென்னையில் தமிழ் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபா்கள் சிலருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்புகளை தொடா்ந்து உத்தரப் பிரதேசம், கா்நாடகம், தில்லி போன்ற மாநிலங்களும் செய்தியாளா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மும்பையில் செய்தி நிறுனங்களைச் சோ்ந்த 53 போ் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்து திங்கள்கிழமையன்று அதிா்ச்சி தெரிவித்திருந்த மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், இதுதொடா்பான அறிவுறுத்தல் ஒன்று அனைத்து செய்தி ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் எனத் தெரிவித்தாா்.
அதனடிப்படையில், இந்த அறிவுறுத்தலை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதில் கரோனா பாதிப்பு தொடா்பான மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளா்கள் உரிய பாதுகாப்புடன் செயல்படவேண்டும். அதுபோல செய்தி ஊடக நிறுவனங்களும், அங்கு பணிபுரியும் களப் பணியாளா்கள் மட்டுமின்றி அலுவலகப் பணியாளா்களும் உரிய பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.