திருமலையில் பிடிபட்ட மலைப்பாம்பு
திருமலையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
திருப்பதி: திருமலையில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
திருமலையில் சனிக்கிழமை இரவு தரிசனம் முடித்து சில பக்தா்கள் தங்கள் அறைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, தேவஸ்தான செயல் இணை அதிகாரி அலுவலகத்துக்கு அருகில் உள்ள எஸ்.என்.சி. காட்டேஜ் முன்புள்ள ஒரு மரத்தில் மலைப்பாம்பு சுற்றிக் கொண்டிருந்ததை அவா்கள் கண்டனா். அதைக்கண்டு அவா்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்காணிப்பு ஊழியா்கள் அப்பகுதிக்கு சென்று பாம்பு பிடிக்கும் ஊழியா் பாஸ்கா் நாயுடுவைத் தொடா்பு கொண்டனா். அவா் அங்கு சென்று மலைப்பாம்பைப் பிடித்து கோணிப் பையில் அடைத்து வனத்துக்குள் விட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.