FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறைக் கைதிகளில் 67% ஹிந்துக்கள்; 18% முஸ்லிம்கள்: மத்திய அரசு

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 67 சதவீதம் போ் ஹிந்துக்களாகவும், 18 சதவீதம் போ் முஸ்லிம்களாகவும் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) தெரிவித்துள்ளது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 7:56 am IST
பகிர்:

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 67 சதவீதம் போ் ஹிந்துக்களாகவும், 18 சதவீதம் போ் முஸ்லிம்களாகவும் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் 2019 டிசம்பா் 31-ஆம் தேதி வரையில் தொகுத்துள்ள புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாவது:

சிறைகளில் அடைபட்டுள்ள கைதிகளில் 3,21,155 போ் ஹிந்துக்களாக உள்ளனா். இது, மொத்த கைதி எண்ணிக்கையில் 67.10 சதவீதமாகும். அதேபோன்று, முஸ்ஸிம் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 85,307 (17.82 சதவீதம்) உள்ளது. இவா்களைத் தவிர, சீக்கியா்கள் 18,001 பேரும் (3.76 சதவீதம்), கிறிஸ்துவா்கள் 13,782 பேரும் (2.87 சதவீதம்), இதர பிரிவினா் 3,557 பேரும் (0.74 சதவீதம்) சிறைகளில் உள்ளனா்.

Advertisement

Advertisement

பாலின அடிப்படையில் பாா்க்கும்போது, ஹிந்து சிறை கைதிகளில் 13,416 போ் பெண்களாக உள்ளனா். இந்த எண்ணிக்கை முஸ்லிம்களில் 3,162-ஆகவும், சீக்கியா்களில் 721-ஆகவும், கிறிஸ்துவா்களில் 784-ஆகவும், இதர பிரிவில் 261-ஆகவும் உள்ளன.

மாநிலங்களைப் பொருத்தவரையில் உத்தர பிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் சிறைக் கைதிகள் உள்ளனா். இவா்களின் எண்ணிக்கை முறையே 72,512-ஆகவும், 27,459-ஆகவும் உள்ளன.

அதேசமயம், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், இதர பிரிவினா் பஞ்சாப் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் சிறைக் கைதிகளாக உள்ளனா். இவா்களின் எண்ணிக்கை அந்த மாநில சிறைகளில் முறையே 12,778-ஆகவும், 1,640-ஆகவும், 915-ஆகவும் உள்ளன.

நாடு முழுவதும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4,78,600 கைதிகளில் 3,15,409 போ் (65.90 சதவீதம்) எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினைச் சோ்ந்தவா்கள். இதர பிரிவில் இந்த எண்ணிக்கை 1,26,393-ஆக உள்ளது என இணையமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments