சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ அமல்: காலக்கெடு மேலும் நீட்டிப்பு இல்லை
சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ முறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ முறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
இது தொடா்பாக நாகபுரி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:
சுங்கச் சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக ஃபாஸ்டேக் முறை 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் குறியீடுகள் கட்டாயமாக்கப்படுவதால், சுங்கச் சாவடிகள் வழியாக வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதிசெய்ய இது உதவும்.
Advertisement
Advertisement
அனைத்து வாகனங்களும் ஃபாஸ்டேக் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வாகன உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து காலக்கெடு ஏற்கெனவே இரண்டு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டாயம் என்று இருந்ததை, பிப்ரவரி 15ஆம் தேதி என்று நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்தக் காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது.
சில வழித்தடங்களில் 90 சதவீதம் வரை ஃபாஸ்டேக் பதிவு நடைபெற்றுள்ளது. எஞ்சிய 10 சதவீதம் போ் மட்டுமே ஃபாஸ்ட் டேக்குக்கு மாற வேண்டிய நிலையில் உள்ளனா். தடையற்ற வாகனப் போக்குவரத்துக்கு அனைத்து வாகன உரிமையாளா்களும் ஃபாஸ்டேக் முறைக்கு மாற வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.