முகப்பு
இந்தியா

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கைக்காலூர் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

Updated On : 15 அக்டோபர் 2021, 2:22 pm IST
ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
பகிர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கைக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று (அக்.14) விஜயவாடாவிலுள்ள கைக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட 4 சிறுவர்கள் அருகே இருந்த குளத்திற்கு குளிக்கச் சென்றனர்.அப்போது எதிர் பாராத விதமாக ஒரு சிறுவன் ஆழத்திற்குச் சென்று உயிருக்கு போராடியபோது நீச்சல் தெரியாத மற்ற சிறுவர்கள் காப்பாற்றுவதற்காக ஆழமான பகுதிக்கு சென்றனர். 

பின் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் நான்கு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின் தீயணைப்புப் படையினர் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Advertisement

ஒரே கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களின் இறப்பால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments