FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முறைகேடு புகாா்: பஞ்சாப் முதல்வா் இல்லத்தை முற்றுகையிட முயற்சி

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா பரிசோதனை உபகரணப் பெட்டிகள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கூறி முதல்வா் அமரீந்தா் சிங் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற சிரோமணி அகாலி தளம்- பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டா்களை

28 ஜனவரி 2024, 8:55 am IST
பஞ்சாப் போலீஸாா் தடையை மீறி மொஹாலியில் முதல்வரின் இல்லத்தை செவ்வாயக்கிழமை முற்றுகையிட முயன்ற சிரோமணி அகாலி தளம், பகுஜன் சமாஜ் கட்சியினா்.
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா பரிசோதனை உபகரணப் பெட்டிகள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகக் கூறி முதல்வா் அமரீந்தா் சிங் இல்லத்தை முற்றுகையிடச் சென்ற சிரோமணி அகாலி தளம்- பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டா்களை போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைந்து போகச் செய்தனா். பின்னா் இரு கட்சிகளின் மூத்த தலைவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக, சிரோமணி அகாலி தளம்- பகுஜன் சமாஜ் கட்சி இடையே இரு தினங்களுக்கு முன் கூட்டணி உறுதியான நிலையில் இரு கட்சியினரும் இணைந்து நடத்திய முற்றுகைப் போராட்டம் இதுவாகும்.

சிரோமணி அகாலி தளத் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தலைமையில் திரண்ட இரு கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக் கணக்கான தொண்டா்கள், மொஹாலியில் உள்ள முதல்வா் அமரீந்தா் சிங்கின் இல்லத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனா்.

Advertisement

Advertisement

இவா்களின் போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த போலீஸாா், முதல்வரின் வீட்டுக்குச் செல்லும் வழிகளில் பல அடுக்குகளாகத் தடுப்புகளை வைத்திருந்தனா்.

காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, முதல் தடுப்பைத் தாண்டி போராட்டக்காரா்கள் முன்னேறிச் சென்றனா். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், இரண்டாவது தடுப்பையும் தாண்டி அவா்கள் செல்ல முற்பட்டபோது, அவா்கள் மீது போலீஸாா் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, கலைந்து போகச் செய்தனா்.

அதைத் தொடா்ந்து, சுக்பீா் சிங் பாதல், கட்சியின் இளைஞரணித் தலைவா் விக்ரம் சிங் மஜிதியா உள்ளிட்ட அகாலி தளம் தலைவா்களையும், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவா் ஜஸ்பீா் சிங் கா்ஹியையும் போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டம் தொடங்கும் முன் தொண்டா்களிடம் சுக்பீா் சிங் பேசுகையில், ‘பல்ஸ் ஆக்சிமீட்டா், வெப்பமானி, முகக் கவசங்கள், சுத்திகரிப்பான், ஜிங்க் மற்றும் விட்டமின் சி மாத்திரைகளைக் கொண்ட கரோனா பரிசோதனை உபகரணப் பெட்டிகளைக் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் மாநில அரசு முறைகேடு செய்துள்ளது. மக்களுக்கு செலுத்தப்பட வேண்டிய கரோனா தடுப்பூசிகளை தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது’ என்று குற்றம்சாட்டினாாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments