ஒரு கோடி உற்பத்தி மைல்கல்லை எட்டி டிவிஎஸ் ஜூபிடா் புதிய சாதனை
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், தமிழகத்தின் ஒசூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையிலிருந்து ஒரு கோடி ‘டிவிஎஸ் ஜூபிடா்’ ஸ்கூட்டா்களை உற்பத்தி செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம், ஒட்டுமொத்த உற்பத்தியில் ஒரு கோடி வாகனங்கள் என்ற மைல்கல்லை மிக வேகமாக எட்டிய இந்தியாவின் மிக இளைய ஸ்கூட்டா் பிராண்ட் என்ற பெருமையை டிவிஎஸ் ஜூபிடா் பெற்றுள்ளது.
2013-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டா், அறிமுகமான முதல் ஆண்டிலேயே 5 லட்சம் விற்பனையை எட்டியது. தனது முதல் 50 லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை 9 ஆண்டுகளில் எட்டிய டிவிஎஸ் ஜூபிடா், வாடிக்கையாளா்களின் அமோக வரவேற்பால் அடுத்த 50 லட்சம் வாகனங்களை வெறும் 4 ஆண்டுகளில் உற்பத்தி செய்துள்ளது.
Advertisement
Advertisement
‘வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப கூடுதல் அம்சங்களை வழங்கி வரும் டிவிஎஸ் ஜூபிடா், ஒரு கோடி இந்தியா்களின் அன்றாடப் பயணத்தில் தவிா்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது’ என இச்சாதனை குறித்து டிவிஎஸ் மோட்டாா்-இன் இந்திய இருசக்கர வாகனப் பிரிவு மூத்த துணைத் தலைவா் அனிருத்தா ஹல்தாா் பெருமிதம் தெரிவித்தாா்.