முகப்பு

எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்!

இந்தியாவில் ஒரு கோடி எச்பிவி தடுப்பூசி செலுத்தியது பற்றி...

20 வினாடிகள் முன்பு
எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்!
தடுப்பூசி - file photo
பகிர்:

இந்தியாவில் ஒரு கோடி எச்பிவி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவில்,

சுகாதாரத் துறையில் நோய்த் தடுப்பு நடவடிக்கை பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். சிறுமிகளை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து இந்த தடுப்பூசி பாதுகாக்கும். அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்படும் ஒரு முக்கிய நடவடிக்கை.

Advertisement

Advertisement

இந்த குறிப்பிடத்தக்க சாதனையைச் சாத்தியமாக்கிய அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, பிப்ரவரி 2026-ல் தேசிய அளவிலான இந்த பிரசாரம் தொடங்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்குள்ளேயே, இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

அரசு சுகாதார மையங்களில் 14 வயது சிறுமிகளுக்கு, பெற்றோரின் சம்மதத்துடன், இலவசமாகவும் பாதுகாப்பாகவும், விருப்பத்தின் பேரில் ஒற்றை டோஸ் எச்பிவி தடுப்பூசி வழங்கப்படுகிறது. கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எச்பிவி தொற்றுகளிலிருந்து இளம் சிறுமிகளைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்கள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன. மேலும், 12 மாநிலங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கை அடைந்துள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.