ஒடிசாவில் 50% இருக்கைகளுடன் திரையங்குகளைத் திறக்க அனுமதி
கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோன பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஒடிசா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | ‘ஆக்கிரமிப்பு எனும் உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்’: சீனா உடனான எல்லை பிரச்னையில் ராகுல் விமர்சனம்
Advertisement
Advertisement
ஒடிசா மாநிலத்தில் கரோனா பரவல் சூழல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் மீண்டும் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
கலாச்சார நிகழ்வுகள் உள்பட பொது நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இதுவரை 10,46,798 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.