முகப்பு
இந்தியா

கரோனா குறித்த தவறான தகவல்கள் பகிர்வதில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கரோனா குறித்த தவறான தகவல்கள் அதிகம் பகிரப்படும் நாடுகளின் பட்டியிலில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

Updated On : 15 செப்டம்பர், 2021 at 12:56 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:39 AM

இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தால் கரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இணையம் குறித்த போதுமான வழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தியதாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

'138 நாடுகளில் கரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் மூல பகுப்பாய்வு' என பெயரிடப்பட்ட ஆய்வு சாகே நூலக சங்கம் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கரோனா குறித்து பகிரப்படும் தவறான செய்திகள் உண்மையானதா அல்லது பொய்யானதா என கண்டறியும் வகையில் 94 அமைப்புகள் இந்த ஆய்வில் ஈடுபட்டது. 

Advertisement

இதுகுறித்து வெளியான ஆய்வில், "ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில், சமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது. இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும் இணையப் பயன்பாடு அதிகமுள்ள காரணத்தாலும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தியதாலும் இது நிகழ்ந்திருக்கலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா குறித்து தவறான தகவல்கள் பகிரப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா(15.94), அமெரிக்கா(9.44), பிரேசில்(8.57), ஸ்பெயின்(8.03) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.