பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலர்!
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலரை பற்றி...
நடிகர் ரன்பீர் கபூரின் 'ராமாயணம்' படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.
தங்கல், சிச்சோர் படங்களுக்குப் பிரபலமான இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் ‘ராமாயணா’ படம் அதிகப் பொருள் செலவில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் ராமாயணா படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்தப் படத்தின் அதிகாரபூர்வ டிரைலரை வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் படக்குழு வெளியிட்டது.
Advertisement
Advertisement
பிரமாண்டமான காட்சிகளுடனும் பிரம்மிக்க வைக்கும் கிராஃபிக்ஸ்களுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உலகளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
4 நிமிடங்கள் 9 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லரில், கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ் 'ராவணன்' பாத்திரத்திலும், ரன்பீர் கபூர் ராமர் பாத்திரத்திலும் அசத்த, சீதாவாக மிளிர்கிறார் சாய் பல்லவி.
ராமனுக்கான படமென்றாலும், ராவணனாக மிரட்டுகிறார் யாஷ். சூர்பணகையாக ரகுல் ப்ரீத் சிங்கும், லட்சுமணனாக ரவி துபே, மற்றும் அனுமனாக சன்னி தியோல் நடித்துள்ளனர்.
ராமன் மற்றும் ராவணனின் கம்பீரமான தோற்றம், விஎஃப்எக்ஸ் வேலைப்பாடுகள், பின்னணி இசை என அனைத்தும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ராமாயணாவுக்கு உருவாகியுள்ளது. மேலும், இந்திரனின் வெள்ளை யானை, புஷ்பக விமானம் போன்றவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரஹ்மானுடன் இன்செப்ஷன், இண்டர்ஸ்டெல்லார் புகழ் - கிறிஸ்டோபர் நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹன்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்திருக்கிறது. ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட 'ராமாயணா' தீபாவளி பண்டிகையையொட்டி நவ. 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'Ramayana' trailer: Ranbir Kapoor's Lord Rama finds the perfect nemesis in Yash's menacing Ravana in a visually breathtaking epic; Sai Pallavi's Sita wins hearts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.