FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Updated On : 30 ஜூலை 2026, 9:26 am IST
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

முதல்வர் ச. ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வருகின்றன.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகவர் உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தெருக்களின் சுற்றித்திரியும் நாய்கள் பிரச்னை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு இன்று விசாரிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

அமலாக்கத்துறை உத்தரவுக்கு எதிராக லாட்டரி மார்டின் அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குழந்தைகளை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதை எதிர்த்த வழக்கை தலைமை நீதிபதி இன்று விசாரிக்கிறார்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு எதிராக வேதாந்ந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வரும் தவெக தலைவருமான விஜய், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது.

summary

Election petitions challenging the victories of Chief Minister S. Joseph Vijay and Minister Aadav Arjuna are coming up for hearing at the Madras High Court today (July 30).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments