சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 5) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 5) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...
குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு, தெருநாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற நிபந்தனை அமல்படுத்துவது தொடர்பாக வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 5) விசாரணைக்கு வருகின்றன.
* தெருநாய்களை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற நிபந்தனைகளை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு
* குதிரை பேர வழக்கில் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையை மாற்றி அமைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு.
Advertisement
Advertisement
* குதிரை பேர வழக்கில் கைதான மூவர் பிணை கோரிய மனு.
* தன்னை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தொடர்ந்த வழக்கு.
* தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் விஷால் தரப்பில் வாக்குப் பெட்டிகளை திறந்து வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி வழக்கு இறுதி விசாரணை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.