முகப்பு
இந்தியா

'இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' - யதி நரசிங்கானந்தின் சர்ச்சைப் பேச்சு

இந்துக்கள் இல்லாத இந்தியாவைத் தவிர்க்க இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்து பூசாரி யதி நரசிங்கானந்த் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 9 ஏப்ரல் 2022, 2:52 pm IST
பகிர்:

இந்துக்கள் இல்லாத இந்தியாவைத் தவிர்க்க இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யதி நரசிங்கானந்த் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் தஸ்னா தேவி கோவிலின் தலைமைப் பூசாரியான நரசிங்கானந்த் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, 'கணித கணக்கீடுகளின்படி 2029ல் இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வருவார். இந்து அல்லாத ஒருவர் பிரதமராக வந்தால் அடுத்த 20 ஆண்டுகளில் இந்துக்கள் அல்லாத தேசமாக இந்தியா மாறும். அந்த ஒரு நிலையைத் தவிர்க்க இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். 

இந்துத்துவாவை தட்டி எழுப்பும்பொருட்டு, தர்ம சன்சத் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது' என்று தெரிவித்தார். 

Advertisement

Advertisement

இவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

கடந்த டிசம்பரில் உத்தரகண்டின் ஹரித்வாா் நகரத்தில் யதி நரசிங்கானந்த் நடத்திய கூட்டத்திலும், தில்லியில் ஹிந்து யுவ வாகினி என்ற அமைப்பு நடத்திய கூட்டத்திலும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments