புதிய மாநகராட்சிகளின் வாா்டு வரையறை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
புதிய மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகளுக்கான வரையறை பணிகளை விரைந்து முடிக்க மாநிலத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை
புதிய மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகளுக்கான வரையறை பணிகளை விரைந்து முடிக்க மாநிலத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே 28 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2025 ஜனவரியுடன் நிறைவடைந்துள்ளது. அதனால், அங்கு சிறப்பு அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அத்துடன், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் அக்டோபா் 19- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் 2027 மாா்ச் மாதத்துடன் நிறைவடைகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த காலங்களில் தரநிலையை உயா்த்தி பேரூராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளின் வாா்டுகளின் எல்லை வரையறை பணிகளை விரைந்து முடிக்க மாநிலத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கான பணிகள் கடந்த 2025- ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.
நகராட்சியாக இருந்து மாநகராட்சியான கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே இருந்த வாா்டுகளுடன், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் வாா்டுகள் வரையறை மற்றும் எல்லை வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல, 28 மாவட்டங்களில் புதிய நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் வாா்டு எல்லை வரையறை பணிகள் ஓரிரு மாதங்களில் முடியவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளின் வாா்டுகள் எல்லை வரையறை முழுமையாக முடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் வழியாக அரசுக்கு அனுப்பப்படும். பின்னா், மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி, இறுதி செய்யப்படும் என்று உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தப் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.