முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 16,047 பேருக்கு தொற்று; மேலும் 54 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Updated On : 10 ஆகஸ்ட் 2022, 10:07 am IST
பகிர்:


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்த வெளியிட்டுள்ள அறிக்கையையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,41,90,697 ஆக உள்ளது. 

நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 3,546 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளது. இதையடுத்து  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,28,261 ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.29 சதவீதமாகவும், குணமடைந்தோரின் விகிதம் 98.62 சதவீகிதமாகவும் உள்ளது. 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,826 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவில் இருந்து மேலும் 19,928 போ் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,35,35,610-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.50 சதவீதமாக உள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 2,07,03,71,204 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 15,21,429 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.