தில்லியில் 22 வயது இளம் பெண்ணுக்கு குரங்கு அம்மை
தில்லியில் 22 வயது இளம் பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் 22 வயது இளம் பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் கூறியதாவது, 22 வயது இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மாதிரியை பரிசோதித்ததில் நேற்று அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- கொச்சி அருகே சிறுநீர் குடிக்க வைத்து சிறுமி சித்ரவதை: சித்தி கைது
Advertisement
Advertisement
மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இதன்மூலம் தில்லியில் மொத்தம் 5 குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது 4 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் சமீபத்தில் வெளியூர் எங்கும் சென்று வரவில்லை.
இருப்பினும் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு பயணம் மேற்கொண்டுள்ளார் என்றார். இந்தியாவில் முதன்முதலாக கேரளத்தில் கடந்த ஜூலை 14ஆம் தேதி முதல் நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.