2வது நாளாக ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
கடந்த இரண்டு நாட்களில் பள்ளத்தாக்கில் உணரப்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
Advertisement
Advertisement
வியாழன் அதிகாலை 3.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானது. இது ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரிக்டா் அளவுகோலில் 3.2 ஆக நிலநடுக்கம் பதிவானது.
லேசான நிலஅதிா்வை மக்கள் உணர்ந்தனர். வீடுகளில் இருந்த பொருள்களிலும் அதிர்வை உணர முடிந்ததால் சிலா் தெரிவித்தனர். சிலா் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதிகளில் தஞ்சமடைந்தனா். எனினும், இதனால் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.