கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!
கடந்த ஐந்து நிதியாண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் மொத்தம் 6,255 கிளைகளைத் திறந்துள்ள அதே வேளையில் 4,093 கிளைகளை மூடியுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் மொத்தம் 6,255 கிளைகளைத் திறந்துள்ள அதே வேளையில் 4,093 கிளைகளை மூடியுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறுகையில், அதிகபட்சமாக 2021-22 நிதியாண்டில் 2,564 கிளைகளும், அதைத் தொடர்ந்த நிதியாண்டில் 700 கிளைகளும் மூடப்பட்டதாகத் தெரிவித்தார். அதன்பிறகு 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் 556, அதன் பிறகு 146 மற்றும் 127 கிளைகளை மூடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிளைகளைத் திறப்பது குறித்துப் பேசிய அவர், கடந்த நிதியாண்டில் அதிகபட்சமாக 1,967 கிளைகளும், 2024-25 நிதியாண்டில் 1,823 கிளைகளும் திறக்கப்பட்டன. 2023-24 நிதியாண்டில் 1,057 கிளைகளும், அதற்கு முந்தைய ஆண்டில் 932 கிளைகளும் திறக்கப்பட்டன. அதே வேளையில், மிகக் குறைந்த எண்ணிக்கையாக 2021-22 நிதியாண்டில் 476 கிளைகள் திறக்கப்பட்டன.
Advertisement
Advertisement
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வேண்டுமென்றே கடன் திருப்பிச் செலுத்தாதவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் நிறுவன வாரியாக அவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி பராமரிப்பதில்லை என்றார்.
இருப்பினும், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2026 ஜூன் நிலவரப்படி, வேண்டுமென்றே கடன் திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து (15,930 பேர்) வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 2,85,015 கோடியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பங்கஜ், ரிசர்வ் வங்கியின் தரவுகளின் அடிப்படையில், வங்கிகளால், 'வைப்பீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதியத்திற்கு' மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மொத்த மதிப்பு, 2025 ஜூன் நிலவரப்படி ரூ. 90,545 கோடியாகவும், 2026 ஜனவரி நிலவரப்படி ரூ. 98,073 கோடியாகவும் உள்ளது என்றார்.
Public sector banks have opened 6,255 branches, while they closed 4,093 branches in the last five financial years.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.