FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாட்டின் 9 பொதுத்துறை வங்கிகள் பெயர் மாற்றப்படுகிறதா? உண்மை என்ன?

நாட்டின் 9 பொதுத்துறை வங்கிகள் பெயர்மாற்றப்படுகிறது என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை.

18 செப்டம்பர் 2026, 6:27 pm IST
வங்கிகள் பெயர் மாற்றம்
பகிர்:

நாட்டின் 9 பொதுத்துறை வங்கிகள், மூன்று வங்கிகளுடன் இணைக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும், இது குறித்து மத்திய அரசு அறிவித்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று பிஐபியின் தகவல் சரிபார்ப்பகம் உறுதி செய்திருக்கிறது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை என்ற பெயரில் வெளியாகும் புகைப்படும் போலியானது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளின் ஒரு பெரிய ஒருங்கிணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மேலும் மூன்று நிறுவனங்களாக இணைக்கப்படவுள்ள ஒன்பது வங்கிகளின் பட்டியலையும் வெளியிட்டிருப்பதாகவும் அந்த புகைப்படம் தெரிவிக்கிறது. இது தவறான தகவல்.

Advertisement

Advertisement

இந்தியன் வங்கி, மகாராஷ்டிரம் மற்றும் சென்ட்டிரல் வங்கி உள்ளிட்டவை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு எஸ்பிஐ குழுமம் என்று அழைக்கப்படும்.

இதுபோல, யூனியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, போன்றவை பஞ்சாப் தேசிய வங்கியுடனும், கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் பரோடா வங்கியுடனும் இணைக்கப்படும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இது எதுவும் உண்மையில்லை, அனைத்தும் பொய்யான தகவல் என்று பிஐபி தெளிவுபடுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments