குறையும் கரோனா பாதிப்பு... நாட்டில் புதிதாக 1,334 பேருக்கு தொற்று!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 5 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும்16 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,977 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர்.
Advertisement
Advertisement
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,557 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,84,646 ஆக பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23,193 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,56,41,807 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 42,864 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.