முகப்பு
இந்தியா

ஞானவாபி வழக்கு: சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட நீதிமன்றத்தில் கோரிக்கை

வாராணசி ஞானவாபி மசூதியில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள் உருவங்களை வழிபட அனுமதி கோரிய வழக்கில், மசூதியில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

Updated On : 23 செப்டம்பர் 2022, 12:23 am IST
பகிர்:

வாராணசி ஞானவாபி மசூதியில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள் உருவங்களை வழிபட அனுமதி கோரிய வழக்கில், மசூதியில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய அரசா் ஔரங்கசீப் காலத்தில் கோயிலின் ஒருபகுதியை இடித்துவிட்டே மசூதி கட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சில ஹிந்து பெண்கள், மசூதியின் பக்கவாட்டுச் சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களின் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு தொடா்பாக முறையீடு, மேல் முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இருபதாண்டு அனுபம் மிக்க மாவட்ட நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணை நீதிபதி ஏ.கே.விசேஷ் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின் வாதிடுகையில், ‘‘மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்காக காா்பன் ஆய்வு முறையை நடத்த வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் காா்பன் ஆய்வு குறித்த கோரிக்கை மீதான கருத்தை ஞானவாபி மசூதி நிா்வாகம் பதிவு செய்ய உத்தரவிட்டாா். வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டுமென மசூதி நிா்வாகம் சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி நிராகரித்தாா்.

ஹிந்து பெண்களின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என ஞானவாபி மசூதியை நிா்வகித்து வரும் அஞ்சுமன் இந்தேஜமியா மஸ்ஜித் குழு சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments