மீண்டும் உயருகிறதா கரோனா தொற்று? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
5 மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அம்மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தில்லி, கேரளம், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அம்மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கரோனா தொற்று பரவலானது நாடு முழுவதும் குறைந்துள்ளது. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களும் தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தியுள்ளன.
இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா
Advertisement
Advertisement
அதேசமயம் கடந்த வாரம் தில்லி, ஹரியாணா, கேரளம், மகாராஷ்டிரம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் 5 மாநில அரசுகளுக்கு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதினார்.
அதில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.