முகப்பு
இந்தியா

ஹிமாச்சல அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கான கட்டணத்தை 50 சதவிகிதம் குறைத்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On : 15 ஏப்ரல் 2022, 8:56 pm IST
தல்வர் ஜெய்ராம் தாக்கூர்
பகிர்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கான கட்டணத்தை 50 சதவிகிதம் குறைத்து அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள செளகானில் இன்று நடைபெற்ற 75வது ஹிமாச்சல் தின விழாவில் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் பேசிய அவர், மாநில பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான பேருந்து கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம் ரூ.60 கோடி பெண்களுக்கு மிச்சமாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும் 125 யூனிட் வரை மின்சாரத்தை நுகரும் பயனாளிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் அவர் அறிவித்தார். இதன்மூலம் 11.5 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும், ரூ.250 கோடி வரை மக்களின் செலவு மிச்சமாகும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படும் எனவும் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments