FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மிகப்பெரிய விசா முறைகேட்டைக் கண்டுபிடித்த காவல்துறை; 4 பேர் கைது

சர்வதேச அளவில் மிகப்பெரிய பாஸ்போர்ட் மற்றும் விசா முறைகேட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை இந்திரா காந்தி விமான நிலைய காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

Updated On : 20 ஆகஸ்ட் 2022, 6:07 pm IST
கோப்புப்படம்
பகிர்:


புது தில்லி: சர்வதேச அளவில் மிகப்பெரிய பாஸ்போர்ட் மற்றும் விசா முறைகேட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை இந்திரா காந்தி விமான நிலைய காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

விமான நிலைய காவல்துறை டிசிபி தனு ஷர்மா கூறுகையில், அவர்களிடமிருந்து 325 போலி பாஸ்போர்ட் மற்றும் 175 போலி விசாக்கள் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார்.

இந்த போலி நிறுவனம் குறித்து காவல்துறைக்கக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய குற்றவாளி ஸாகிர் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்திலிருந்து குவைத்துக்குச் சென்ற இந்தியர் ஒருவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments