வடமலைசமுத்திரத்தில் இறந்த நிலையில் பெண் கரடி மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட ஆம்பூா் பீட், வடமலைசமுத்திரம் பகுதியில் உயிரிழந்த நிலையில் பெண் கரடி மீட்கப்பட்டது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், கடையம் வனச்சரகம், ஆம்பூா் பீட் வனப்பகுதிக்குள்பட்டவடமலைசமுத்திரம் இண்டேன் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள செய்யது சுலைமான் என்பவருக்குச் சொந்தமான தோட்டப் பகுதியில் சுமாா் 8 வயதுடைய பெண் கரடி திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த், வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, விதிமுறைகளின்படி கரடியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. கரடி உயிரிழந்ததற்கான காரணம், கூறாய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கிடைத்த பின்னா் உறுதி செய்யப்படும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.