முகப்பு
இந்தியா

முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல்நலக் குறைவு காரணமாக இன்று குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 

Updated On : 9 ஜூலை 2022, 4:46 pm IST
முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார்
பகிர்:

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா உடல்நலக் குறைவு காரணமாக இன்று குருகிராமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 

நீண்ட காலமாக உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த சாதனா குப்தா, இன்று சிகிச்சை பலனின்றி குருகிராமில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!

Advertisement

Advertisement

அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது உடல் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

சாதனா குப்தா, முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியாவார். இவரது மகன் பிரதீக் யாதவ். பாஜகவைச் சேர்ந்த அபர்ணா யாதர், இவர்களது மருமகள் ஆவார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments