17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: தேர்தல் ஆணையம்
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கத் தகுதியான 18 வயது நிரம்பியவுடனே(ஜனவரி 1 ஆம் தேதிப்படி) வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும்.
ஆனால், இனிமேல் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்றும் 18 வயது நிரம்பும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அதுசார்ந்த அதிகாரிகளும் இதுகுறித்து தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே இணைந்து உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.