முகப்பு
இந்தியா

அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் புதிதாக 4,041 பேருக்கு தொற்று; 10 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 3 ஜூன் 2022, 9:53 am IST
பகிர்:

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,041 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,041 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,86,585 ஆக உள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 21,177 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக உள்ளது.

Advertisement

Advertisement

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 10 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,651 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 2,363 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,22,757 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 12,05,840 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 1,93.83,72,365 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments