சாதனையாளர்களில் மாணவிகள் அதிகரிக்க வேண்டும்: ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி!
பெரும் சவால்களைக் கண்டு அஞ்சக் கூடாது என ஐஐடி தில்லி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பேசியது பற்றி..
ஐஐடி தில்லியில் கல்விசார் சிறப்பில் மாணவிகளின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கல்விசார் சிறப்பை அங்கீகரிக்கும் விதமாக, தகுதி வாய்ந்த மாணவர்களுக்குக் குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இயக்குநரின் தங்கப் பதக்கம், சங்கர் தயாள் சர்மா தங்கப் பதக்கம் மற்றும் 'பெர்ஃபெக்ட் டென்' தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் மிக உயரிய கௌரவங்களைப் பிரதமர் வழங்கினார்.
தில்லி ஐஐடியில் நடந்த 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இவ்விழாவில் 587 பிஎச்.டி ஆய்வாளர்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பிரதமர் உரையாற்றினார்.
Advertisement
Advertisement
சாதனைகளுக்காகப் பதக்கங்களையும், விருதுகளையும் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
நாட்டின் திறமைமிக்க இளைஞர்களாகிய உங்கள் வாழ்வில் ஒரு புதிய பயணத்தின் துவக்கம். நாட்டுக்காக சிறந்த சாதனைகளைப் புரிய வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் உங்களை பார்ப்பதில் பெருமை.
இந்த உணர்வுப் பூர்வமான தருணத்தில், ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்போதேல்லாம் இந்தக் கல்லூரி வாழ்க்கையை நீங்கள் நினைவுகூறுவீர்கள். தொழில்நுட்பம், தொழில்துறைகள் மற்றும் தொழில் முறைகள் என அனைத்தும் மாறும். ஆனால், இவை அனைத்திற்கும் மத்தியிலும் தொடர்ந்து கற்றுக்கொள்பவர்களே வெற்றி பெறுவார்கள்.
தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். பெரும் சவால்களைக் கண்டு அஞ்சக் கூடாது. தீர்வுகளைத் தேடத் துணிவுடன் இருங்கள். பட்டம் பெறும் சாதனையாளர்களில் மாணவிகளின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஐஐடி தில்லியின் சோனிபட் வளாகத்தில் நிறுவப்பட்ட, செயற்கை நுண்ணறிவு (தொழில்நுட்பம் சார்ந்த அதிநிறைவேற்றத் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியான 'பரம் பிரக்யா'வையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
அதிநவீன வசதி கொண்ட இந்த மையம், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், மேம்பட்ட கணினித் தொழில்நுட்பம் மற்றும் பல்துறை சார்ந்த ஆராய்ச்சி ஆகியவற்றில் நிறுவனத்தின் திறன்களைக் கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Prime Minister Narendra Modi on Saturday said he wished girls were also there among the medallists and awardees at IIT Delhi's convocation, emphasising the need for greater female participation in academic excellence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.