FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரைத் தாக்கிய இளைஞர்: சொந்த ஊரில் நடந்த விபரீதம்!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Updated On : 27 மார்ச் 2022, 9:56 pm IST
பகிர்:

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தனது சொந்த ஊரான பாக்தியாபூர் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும்போது மேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் நிதிஷ் குமாரை பின்புறமாகத் தாக்கினார்.

முதல்வர் நிதிஷ் குமார் தனது மக்களவைத் தொகுதியான பார்ஹ் பகுதியில் அவ்வபோது பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தனது சொந்த ஊரான பாக்தியாபூர் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தச் சென்றார். 

Advertisement

Advertisement

தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் இருந்த நிதிஷ் குமார், ஷில்பத்ரா யாஜியின் சிலைக்கு மரியாதை செய்ய மேடைக்குச் சென்றார். மேடையில் குனிந்து மலர்களை எடுக்கும்போது, திடீரென மேடைக்கு வந்த இளைஞர் முதல்வரை பின்புறமாகத் தாக்கினார். 

உடனடியாக மேடைக்கு வந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை மடக்கி இழுத்துச்சென்று அடிக்க முயன்றனர். அப்போது தடுத்த முதல்வர் நிதிஷ் குமார், இளைஞரை அடிக்காதீர்கள். அவர் அடித்ததற்கான காரணத்தை அவர் சொல்லட்டும் என்று கூறினார். 

பின்னர் காவல் துறையினர் இளைஞரை அழைத்துச் சென்றனர். முதல்வரைத் தாக்கிய இளைஞரின் பெயர் சங்கர் ஷா என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

முதல்வர் நிதிஷ் குமார் பார்ஹ் தொகுதியில் 5 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments