முகப்பு
இந்தியா

காஷ்மீர் பண்டிட் கொலை: ஜம்மு சாலையில் போராட்டம்

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜம்மு - அக்னூர் சாலையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 15 அக்டோபர் 2022, 6:15 pm IST
பகிர்:


ஜம்மு : தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஜம்மு - அக்னூர் சாலையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காஷ்மீர் பண்டிட் பூரண் கிரிஷண் பட்  கொல்லப்பட்டார்.

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பூரண் கிரிஷண் பணியாற்றி வந்த நிலையில், இன்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

அவரது படுகொலையைக் கண்டித்தும், அண்மையில் காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடக்கும் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும் நூற்றுக் கணக்கானோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், நிலைமையை சமாளிக்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி கோஷங்கள் எழுப்பினர்.

எங்களது மோசமான அச்சம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமானோர் ஏற்கனவே இப்பகுதியை விட்டு வெளியேறிவருகிறார்கள். இல்லையென்றால் கொல்லப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள் என்கிறார் போராட்டக்காரர்களில் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.