அபுதாபியில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கித் தவிக்கும் பஞ்சாபி தொழிலாளர்கள்!
அபுதாபியில் 100-க்கும் மேற்பட்ட பஞ்சாபி புலம்பெயர் தொழிலாளர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் இந்திய அரசிடம் உதவி கோரியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அபுதாபியில் 100-க்கும் மேற்பட்ட பஞ்சாபி புலம்பெயர் தொழிலாளர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் இந்திய அரசிடம் உதவி கோரியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பஞ்சாபி தொழிலாளர்கள், திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் திருப்பி தராமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
அபுதாபியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபி தொழிலாளர்கள் விரைவில் நாடு திரும்பக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு சமூக ஆர்வலர் தில்பாக் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவ துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார், மேலும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.