தேநீர் பொடி என நினைத்து ரசாயன பொடி பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழப்பு
ரசாயனம் கலந்த தேநீர் அருந்திய தாத்தா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரசாயனம் கலந்த தேநீர் அருந்திய தாத்தா மற்றும் அவரது பேரக்குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் நாக்லா கன்ஹாய் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் சிவானந்தன், அவரது மகன்கள் சிவாங் (6 வயது), திவ்யான்ஷ் ( 5 வயது) மற்றும் அவரது மாமனார் ரவீந்திர சிங் மற்றும் அருகில் வசிக்கும் சோப்ரான் ஆகியோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிவானந்தன் வீட்டில் தேநீர் அருந்திய பிறகு அவர்களுக்கு மயக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரவீந்திர சிங் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறியுள்ளனர். இதனையடுத்து, மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றனர்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்திய இந்தியா!
Advertisement
Advertisement
முதல்கட்ட விசாரணையில் தேநீர் பொடிக்கு பதிலாக ரசயானப் பொடி மாறுதலாக பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.