அக்.1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார்
நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.
நாட்டில் 5ஜி அலைக்கற்றை சேவையைக் கொண்டுவருவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜியோ நிறுவனத்தின் 45ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி தீபாவளி முதல் நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி அலைக்கற்றை சேவை கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கை
Advertisement
Advertisement
இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நாட்டில் 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையானது பின்னர் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் 5ஜி தொழில்நுட்பம் 20 முதல் 30 மடங்கு வரை அதிக வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.