FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

15 நாடுகளில் அதிகம் பார்க்கப்படும் படமான கட்டா குஸ்தி - 2?

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு வரவேற்பு குறித்து...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:05 pm IST
நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி
பகிர்:

கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 15 நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்டு வரும் படமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் அண்மையில் வெளியானது. தற்போது, இந்தியா உள்பட 15 நாடுகளில் இப்படம் அதிகம் பார்க்கப்படும் திரைப்படங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்குப் பின் கணவன் - மனைவிக்கு இடையேயான புரிதல், ஒருவரின் கனவுக்கு இன்னொருவர் துணை நிற்பது என நகைச்சுவையுடன் கூடிய மல்யுத்த திரைப்படமாக உருவானதால் பல நாடுகளிலும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

The movie Gatta Kusthi 2 has become one of the most-watched films on Netflix across 15 countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments