கோப்புப் படம். 
இந்தியா

மும்பையில் தெரு நாய் மீது ஆசிட் வீசிய பெண்!

மும்பையில் தெரு நாய் மீது ஆசிட் வீசியதாக பெண் ஒருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

DIN

மும்பையில் தெரு நாய் மீது ஆசிட் வீசியதாக பெண் ஒருவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம், மலத் மத்வானி பகுதியில் தெரு நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அந்த நாய் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. பாதிக்கப்பட்ட நாயை தொலைக்காட்சி நடிகர் ஜெயா பட்டாச்சார்யா மீட்டு சிகிச்சைக்காக அவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு கொண்டு சென்றார். 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறையினர் கூறியுள்ளனர். பூனைகளுக்கு உணவளிக்கும் போது அந்த நாய் தொந்தரவு செய்த காரணத்தால் நாய் மீது ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 

மும்பையில் நாய் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT