கோப்புப்படம் 
இந்தியா

இந்தக் காரணத்தினால் இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கத்துக்கு வாய்ப்பில்லை: வல்லுநர்கள் தகவல்

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்திலிருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

DIN

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்திலிருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அதனை திறம்பட எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் இது போன்ற இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள பயிற்சி பெற்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் முறையான விதிமுறைகளைப் பின்பற்றினால் பெரிய அளவிலான நிலநடுக்கங்களை குறைக்க முடியும். நிலநடுக்கத்தை தாங்கி நிற்கும் தரமான கட்டடங்களை கட்டுவதன் மூலம் நிலநடுக்கத்தினால் ஏற்படும் பேரழிவினைக் குறைக்கலாம். இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலநடுக்கங்களின் மூலம் அழுத்தமானது வெளியேறுகிறது. சில நேரங்களில் ரிக்டர் அளவுகோலில் 4 அல்லது 5 என பதிவாகும் அளவிலான நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன. புவியின் மேலுள்ள புவித்தட்டுகள் தொடர்ந்து நகர்வதால் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் மூன்று புவித்தட்டுகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்த மூன்று புவித்தட்டுகளும் சந்திக்கும் இடமானது மிகவும் கடினமானதாக இருக்கும். அதன் காரணத்தினால் அதிக அளவிலான அழுத்தத்தினை அவை தாங்கி நிற்கின்றன. அந்த அழுத்தம் வெளிப்பட்டால் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படும்.

இதேபோன்று துருக்கியில் மூன்று புவித்தட்டுகள் சந்திக்கும் இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றான அரேபியன் புவித்தட்டு, ஆப்பிரிக்கன் புவித்தட்டு மற்றும் அந்தோலியன் புவித்தட்டு சந்திக்கும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவிலான அழுத்தம் வெளியேறியதன் காரணத்தினாலேயே இந்த மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் போன்றவை இல்லாத காரணத்தினால் அழுத்தங்கள் ஒரே இடத்தில் அதிகமாக குவிந்து இத்தகைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவித்தட்டுகள் பெரிதாக இருந்ததால் அவை உடைபடுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டுள்ளது. அதன் காரணத்தினால்  24 மணி நேரத்தில் இரண்டு மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்தியா நிலநடுக்கம் நடைபெறக் கூடிய பகுதியில்தான் அமைந்துள்ளது. இருப்பினும், நமக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது. இந்தியாவில் அதிக அளவிலான சிறிய நிலநடுக்கங்கள் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆற்றல் மெல்ல மெல்ல அவ்வப்போது வெளியிடப்படுகிறது. அதனால், இந்தியாவில் பெரிய அளவிலான பொருட்சேதங்களையும், உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தும் அளவிற்கான நிலநடுக்கம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT