FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புதிய வரலாறு: டிசம்பர் மாத யுபிஐ பரிவா்த்தனை 782 கோடி

கடந்த டிசம்பா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தைவிட 7 சதவீதம் அதிகம் ஆகும்.

Updated On : 2 ஜனவரி 2023, 5:49 pm IST
பகிர்:

கடந்த டிசம்பா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தைவிட 7 சதவீதம் அதிகம் ஆகும்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது.  இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறை.

ஒட்டுமொத்தமாக, 2022ஆம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது.

இதன்படி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022ஆம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2021ஆம் ஆண்டு மொத்த பரிவர்த்தனை 3,800 கோடியாகவும், பரிவர்த்தனை தொகை ரூ.72 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாதந்தோறும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments