FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலக இதுதான் காரணம்: டி.கே.சிவகுமார்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.

Updated On : 3 ஜூன் 2023, 3:48 pm IST
பகிர்:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காந்தி குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று முதல்வர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தொகுதிக்கு வாக்காளர்களை சந்திக்க சென்ற அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் என்னை கர்நாடகத்தின் முதல்வராக்க அதிக வாக்குகளை எனக்கு அளித்தீர்கள். ஆனால், என்ன செய்வது. கர்நாடக முதல்வர் பதவிக்கான முடிவு எடுக்கப்பட்டு விட்டது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே எனக்கு ஒரு அறிவுரை வழங்கினார்கள். மூத்த தலைவர்களின் அந்த  அறிவுரையை ஏற்று நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், நான் அமைதியாக இருக்க நேர்ந்தது. ஆனால், உங்களிடம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்னை கர்நாடகத்தின் முதல்வராக பார்க்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டதில் எந்த ஒரு தவறும் இல்லை. அமைதியாக இருப்போம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments