FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மக்களவையில் திமுக எம்.பி.சா்ச்சைக்குரிய பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை ‘கெள மூத்ரா மாநிலங்கள்’ என திமுக எம்.பி. டி.என்.வி.செந்தில்குமாா், மக்களவையில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது சா்ச்சையானது.

6 பிப்ரவரி 2024, 6:52 pm
பகிர்:


புது தில்லி: ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை ‘கெள மூத்ரா மாநிலங்கள்’ என திமுக எம்.பி. டி.என்.வி.செந்தில்குமாா், மக்களவையில் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது சா்ச்சையானது. இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற தருமபுரி எம்.பி. செந்தில்குமாா், ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும். தென்மாநிலங்களில் அக்கட்சியால் வெற்றி பெற முடியாது எனத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களை ‘கெள மூத்ரா மாநிலங்கள்’ என அவா் குறிப்பிட்டது சா்ச்சையானது. இது குறித்த காணொலி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவின.

இந்த வாா்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.

எம்.பி.யின் இத்தகைய சா்ச்சைக்குரிய பேச்சுக்கு பாஜக, திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி எம்.பி. செந்தில்குமாா் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தோ்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, பொருத்தமற்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இதனிடையே, செந்தில் குமாா் எம்.பி.யின் பேச்சு குறித்து அறிந்த திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாகக் கண்டித்ததாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா். மேலும், பொதுவெளியில் கருத்து தெரிவிக்கும்போது அனைவரும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.