FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

’பாபநாசம்’ பட பாணியில் சிறுமி கொலை - 16 வயது சிறுவன் கைது!

தன்னை கேலி செய்த 8 வயது சிறுமியை, 16 வயதே ஆன ஒரு சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:52 pm
கோப்புப்படம்
பகிர்:

மும்பை : மகாராஷ்டிராவில் தன்னை கேலி செய்த 8 வயது சிறுமியை, 16 வயதே ஆன ஒரு சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலுள்ள பேல்ஹார் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதியன்று, அருகிலிருக்கும் கடையில் ஐஸ்கிரீம் வாங்கச் சென்ற சிறுமி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

புகாரின் அடிப்படையில், மாயமான சிறுமியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், டிச.4 ஆம் தேதியன்று, அதே அடுக்குமாடி கட்டடத்திலுள்ள ஆள் நடமாட்டமில்லாத ஒரு அறையில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையில், அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே, சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது சிறுவன் ஒருவன் திடீரென மாயமான தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து மாயமான சிறுவனை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர், நேற்று (டிச.6) சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து,  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த சிறுவனும், கொலை செய்யப்பட்ட சிறுமியும், எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வந்ததாகவும், ஒருகட்டத்தில், தன்னைத் தொடர்ந்து கேலி செய்து வந்த சிறுமிக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த சிறுவன், சம்பவத்தன்று இரவு வீட்டை விட்டு தனியாகச் சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்றதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். அதன் பின், சிறுமியை தனது வீட்டுக்குள் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று அங்கு அந்த சிறுமியை கொலை செய்ததாகவும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.  

தொடர்ந்து கொல்லப்பட்ட சிறுமியின் உடலை தனது வீட்டிலேயே 2 நாள்களாக பதுக்கி வைத்த சிறுவன், தனது தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, சிறுமியின் உடலை யாருக்கும் தெரியாமல் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள ஒரு அறையில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மகனை யாருக்கும் தெரியாமல் தன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் சிறுவனின் தந்தை.

எனினும், சிறுவனின்  தந்தையின் அறையின் வாசலில் சிறுமியின் காலணிகள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.