FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு...

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா். அவரது வெற்றியை எதிா்த்து மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி ஸ்டாலினும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. அருள்முருகன், தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கை ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி. அருள்முருகன், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

summary

High Court refuses to dismiss election case against Udhayanidhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.