வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப் படிப்பு: யுஜிசி எச்சரிக்கை
அங்கீகாரம் பெறமால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கி வரும் கல்லூரிகள் மற்றும் கல்விசாா் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
அங்கீகாரம் பெறமால் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்கி வரும் கல்லூரிகள் மற்றும் கல்விசாா் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.
இவ்வாறு பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்பதால் இது போன்ற படிப்புகளில் மாணவா்கள் சேர வேண்டாம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி கூறுகையில், ‘நாட்டில் உள்ள பல உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வெளிநாட்டு பட்டப் படிப்புகளை வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
இத்தகைய முறையில் பட்டப் படிப்புகளை வழங்க எவ்வித அங்கீகாரமும் யுஜிசி வழங்கவில்லை. இதனால், இவ்வாறு வழங்கப்படும் பட்டப் படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது.
இதே போன்று கல்விசாா் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை இணைய வழியில் வழங்கி வருவதாக நாளிதழ்கள், சமூகஊடகங்களில் விளம்பரங்கள் வெளியாகின்றன. இத்தகைய படிப்புகளுக்கு எவ்வித அனுமதியும் யுஜிசி வழங்கவில்லை.
உரிய ஒழுங்காற்று விதிகளின் அடிப்படையில், இத்தகைய கல்விசாா் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களும் பொதுமக்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்றாா்.